என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைரலாகும் வீடியோ"
- பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
- ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
க்ஷதனது திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்டுகிறது.
Audemars Piguet நிறுவனத்தின் Perpetual Calendar வகை லிமிட்டட் எடிஷன் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷாருக்கான், ரன்வீர் உள்பட சிலர் ஒரே மாதிரியான வாட்களை அணிந்து எடுத்த ரீல்ஸ் இணையத்தில் பரவி வருகிறது.
- மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.
- பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கிரேன் சரிந்து 20 அடி உயரத்தில் இருந்து கீயே விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த கிரேனில், போபாலின் வார்டு 66-ன் கவுன்சிலர் ஜிதேந்திர சிங் ராஜ்புத் தனது மாமாவுடன் கிரேனில் இருந்தார். அவர்களில் ஒருவர் கிரேன் ஆபரேட்டரிடம் மேலே செல்லும்படி சைகை செய்வதைக் கண்டார்.
கிரேன் சிலையை அடைந்ததும், கவுன்சிலர் மாலை அணிவிக்க முன்னோக்கி சாய்ந்தபோது, கிரேனில் இருந்த வெல்டிங் உடைந்ததால், கிரேன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ராஜ்புத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் அவரது மாமாவும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது. தொடர் சிகிச்சை, கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை, உணவை தானே உட்கொண்டு வந்தது.
இந்நிலையில், பெண் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வரும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாயிடம் பால் குடிக்க முயலும் குட்டி யானைக்கு லாக்டோஜன், இளநீர் ஆகியவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருப்பினும், தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பரிதவிக்கும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
- காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.
மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.
பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.
லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினெஸ்சோட்டா மாகணத்தில் உள்ள யுபிஎஸ் பிளாசா பில்டிங்கில் நேற்று ரக்கூன் ஒன்று மேலே ஏற முயன்றது. 25 மாடி கட்டிடத்தில் ஏறிய ரக்கூனை அனைவரும் கண்டு ரசித்தனர்.
அது மாடியில் ஏறும் போது பல இடங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் தொடர்ந்து ஏறியது. இரவில் அனைவரும் தூங்கிய பின் ரக்கூன் மொட்டை மாடியை வந்தடைந்தது. ரக்கூன் ஏற தொடங்கியது முதல் மக்கள் அதனை கண்காணிக்க தொடங்கினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் மாடியில் இருந்த ரக்கூனை பத்திரமாக மீட்டனர். ரக்கூன் ஏறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஒரே இரவில் அந்த ரக்கூன் சமூக ஊடகங்களில் பிரபலமானது. #Raccoon
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.
பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர். #SachinTendulkar
சீனாவின் சியாங் மாகாணத்தில் உள்ள ஹூனன் நகரில் 2 வயது குழந்தை வீட்டில் தனியாக இருந்தது.மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது. அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.
முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.
ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் பிரான்ஸில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.
பள்ளி நிகழ்ச்சியில் சிறுமிகள் நடனம் ஆட வரிசையாக நிறுத்தப்பட்டனர். அப்போது அதில் ஒரு சிறுமி மேடையை பார்த்து பயந்து போய் அழுதாள். நடனமாடி மறுத்து ஒரே இடத்தில் நின்று விட்டாள். இதனால் நடனம் பாதியில் கெட்டது.
அப்போது திடீரென கைக்குழந்தையும் மேடைக்கு வந்த குழந்தையின் தந்தை அவள் அருகில் சென்று ஆடக்கூறினார். ஆனால் அவள் ஆடவில்லை. அவள் கையை பிடித்து ஆட வைத்தார். பின்னர் அவளுடன் இணைந்து ஆட தொடங்கினார். தந்தை ஆடுவதை கண்ட சிறுமி மகிழ்ச்சியான ஆடினார். நடனம் முடியும் வரை தந்தை மகளுடன் இணைந்து கைக்குழந்தையுடன் ஆடிய சம்பவம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது.
மகள் நடனத்தை மறக்காமல் தந்தை இணைந்து ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #daddancing
சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள ஆறு வழிச்சாலையில் வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வர தொடங்கின.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர். பரபரப்பான சாலையில் முதியவருக்கு உதவி முன்வந்த போலீசாரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் போக்குவரத்து துறை அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவு செய்துள்ளது. #piggyback
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட மார்க் ரூடேவின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மார்க் ரூடே பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் இருந்த காபி கீழே விழுந்தது. அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து மாபை வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார். இதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இதுகுறித்து வீடியோவை கண்ட பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் ரூடே சென்ற ஆண்டு நெதர்லாந்து மன்னரை சந்திக்க சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் எளிமையான செயல்கள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PMMarkRutte
கனடா நாட்டில் சேவா புட் பேங்க் என்ற அமைப்பின் மூலமாக ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பாக நிதிதிரட்டும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனடாவின் இனோவேஷன், அறிவியல் மற்றும் பொருளாதரா மேம்பாட்டு துறை மந்திரி நவதீப் பையின்ஸ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கலந்து கொண்டனர். விழாவின் போது இருவரும் நடனமாடினர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் 50 ஆயிரம் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 11 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். #JagmeetSingh #NavdeepBains
ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் பெற்ற வெற்றியை ரசிகர்கள் விமர்சையாக கொண்டி வருகின்றனர். இந்த அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சிறப்பாக விளையாடினார்.
அவர் போட்டியின் போது நடனமாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஓய்வறையில் சக வீரர்களுடன் விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிராவோ நேற்று டுவிட் செய்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வி ஆர் த கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்ற இந்த பாடலை பிராவோ தானே எழுதி பாடியுள்ளார். டோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றவர்களை பெருமைப்படுத்தி பாடப்பட்டுள்ள இந்த பாடலை ரசிகர்களுக்காக வெளியிட்டதாக பிராவோ தெரிவித்தார். #yellowarmy #CSK #DwayneBravo #WeAreTheKings
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்